8 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை இந்த மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பஹா நீதிவான் மஞ்சுளா கருணாரத்ன உத்தரவிட்டார்.
கம்பஹா, சிறிமல் உயன பகுதியில் வழிபாட்டிடம் ஒன்றை நடத்தி வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதான ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தோஷம் கழிக்க தாயாருடன் சென்ற சிறுமியே துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.
சிறுமி பலவீனமாக இருப்பதாக தெரிவித்த மந்திரவாதி, சிறுமியை வலிமையானவராக மாற்றுவதாக கூறி கட்டியணைத்துள்ளார்.
கடவுளின் அனுக்கிரகமுள்ள மந்திரவாதியொருவர் பெண்ணை தழுவும் போது, அந்த பெண் வலிமை பெறுகிறார், மந்திரவாதிகளுக்கு சாதாரண மனிதர்களைப் போல ஒரு காம மனம் இருக்காது என்றும் அவர் சிறுமியின் தாயாரிடம் கூறினார்.
பின்னர் தனது படுக்கைக்கு சிறுமியை அழைத்த அந்த நபர், தனக்கு மசாஜ் செய்ய கூறியுள்ளார். பின்னர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளார்.