25.1 C
Jaffna
January 8, 2025
Pagetamil
விளையாட்டு

டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா!

நேற்று நடைபெற்ற டெல்லி கப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து தற்போது ‘பிளே-ஓப்’ சுற்று நடந்து வருகிறது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் முன்னாள் சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கப்பிட்டல்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து நடந்த வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ரோயல் சலஞ்சர்சை விரட்டியடித்தது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி கப்பிட்டல்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் ஷார்ஜாவில் பலப்பரிட்சை நடத்தின.

ரொஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய டெல்லி அணி, கொல்கத்தா அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ரன்களை குவிக்க தடுமாறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக தவான் 36 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களும் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷுப்மன் கில் 46 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 55 ரன்களும் சேர்த்து அணிக்கு பலமான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்தவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் டெல்லியின் பக்கம் சாய்ந்தது.

தினேஷ் கார்த்திக், இயன் மோர்க்கன், ஷகிப் அல் ஹசன், சுனில் நரேன் ஆகிய நான்கு பேரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். கடைசி ஓவரில் அஷ்வின் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியாக 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் ராகுல் திரிபாதி அடித்த சிக்சர் மூலம் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

ஐ.பி.எல். 2021 கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோத உள்ளது.

இந்த ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

Leave a Comment