மட்டக்களப்பு கித்துள் நீர்த்தேக்க அபிவிருத்தி குறித்து நாமல் ஆராய்வு!

Date:

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உறுகாமம் கிதுள்
பிரதேசத்தில் உள்ள கிதுள் நீர்த்தேக்கம் மற்றும் கிரான் நீர்த்தேக்கம் ஆகியன அபிவிருத்தி
குறித்து ஆராய்வதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச  கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினரான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்
பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் நீர்ப்பாசனத்துறை அபிவிருத்தி
திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின்போது கித்துள் நீர் தேக்கஅபிவிருத்தி பணியினால் பாதிக்கப்படும் விவசாய காணிகளுக்கு மாற்றுக் காணிகள் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் விவசாயிகளிடம் கலந்துரையாடப்பட்டது.

கித்துள் நீர்த்தேக்கம் விஸ்தரிக்கப்படுவதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத்துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் வகையில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் மேலும் 18 ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி விவசாய காணிகள்
அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் அபிவிருத்தி பணியால் பாதிக்கப்படும் காணி
உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரை குறித்த குழுவினர் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டு அறிந்துகொண்டனர் பின்னர் பாதிக்கப்படும் காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பிரதேச சபையின் முயற்சி

நிந்தவூர் – 09 பகுதியில் அமைந்துள்ள வவ்வாளோடை களப்பை நீர்வாழ் உயிரின...

கல்முனை, அக்கரைப்பற்று மாநகர சபைகளுக்குக் கொழும்பு மாநகர சபையினால் தீயணைப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு

கல்முனை மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை ஆகியவற்றுக்குக் கொழும்பு...

அனோஜனுக்கா ஜனாதிபதியிடமும், சவூதி மன்னருக்கும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மனு

அனோஜனுக்கா ஜனாதிபதியிடமும், சவூதி மன்னருக்கும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மனு அவமதிப்பான கருத்து ஒன்றை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்