கொழும்பில் 2008 மற்றும் 2009 க்கு இடையில் 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி கடற்படை அட்மிரல் வசந்த கரன்னகொட மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை கைவிடுவதென சட்டமா அதிபர் திணைக்களம் எடுத்த முடிவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. .
காணாமல் போன இளைஞரின் நான்கு உறவினர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் கடற்படைத் தளபதி மீதான குற்றச்சாட்டுகள் ரிட் மனு விசாரணை முடியும் வரை தொடர வேண்டும் என்று மனுதாரர்கள் கோரினர்.
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்னெடுக்கப்படமாட்டாது என சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு இன்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1