26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

சட்டவிரோதமாக நியூசிலாந்து செல்ல முற்பட்ட 63 பேர் சிக்கினர்: யாழ், முல்லைத்தீவை சேர்ந்தவர்கள்!

சட்டவிரோதமான முறையில் நியூசிலாந்து செல்ல முற்பட்ட 63 பேர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைமுக வீதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்த 63 பேர் கைது செய்துயப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களில் பெண்ணொருவர் உட்பட இரண்டு சிறார்கள் அடங்குவதாகவும் தெரியவருகின்றது.

கடந்த 15 நாட்களாக இவர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து குறித்த தனியார் விடுதியில் தங்கி இருந்ததாக அரச புலனாய்வுத் துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் செய்து வருவதாகவும், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

-அப்துல்சலாம் யாசீம்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

திருகோணமலையில் நேரிய பெற்றோரியம் பயிற்சி

east tamil

வாழைச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக 63 வயது நபர் கொலை

east tamil

திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு

east tamil

மட்டக்களப்பில் மூவின மக்களின் பங்கேற்புடன் சுதந்திர தின கொண்டாட்டம்!

east tamil

Leave a Comment