27.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

லிபியாவில் கரையொதுங்கிய 2 படகுகளில் 16 அகதிகளின் சடலங்கள்!

லிபியாவில் கரை ஒதுங்கிய 2 படகுகளில் இருந்து 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. படகுகளில் இருந்து 187 பேர் மீட்கப்பட்டனர்.

“திங்கள்கிழமை மாலை திரிபோலி கடற்படை தளத்திற்கு வந்த 2 படகுகளில்16 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. தப்பிப்பிழைத்த 187 பேருக்கு உதவி வழங்கப்பட்டது, சிலருக்கு UNHCR மற்றும் சர்வதேச மீட்புக் குழு அவசர மருத்துவ உதவி தேவை” என்று UNHCR ட்வீட் செய்தது.

“பயணிகள் முந்தைய நாள் இரவு ஸ்வாரா மற்றும் அல்கோம்ஸிலிருந்து (மேற்கு லிபியா) புறப்பட்டனர்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2011 இல் மறைந்த தலைவர் முஅம்மர் கடாபியின் வீழ்ச்சியிலிருந்து லிபியா பாதுகாப்பின்மை மற்றும் குழப்பம் காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறது. லிபியாவிலிருந்து  ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறியவர்கள் மத்திய தரைக் கடலை கடந்து ஐரோப்பிய நாடுகளிற்கு செல்ல முயல்கிறார்கள். அவர்களில் பலர் வழியில் உயிரிழக்கின்றனர்.

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (ஐஓஎம்) தகவல் படி, இந்த ஆண்டு இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 26,314 சட்டவிரோத குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டு லிபியாவுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மத்திய தரைக்கடலில், லிபிய கடற்கரையில் 474 பேர் இறந்தனர் மற்றும் 689 பேர் காணாமல் போயுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

Leave a Comment