உரப் பற்றாக்குறையால் விவசாயிகள் எதிர்கொள்ளும் அவலம் காரணமாக எதிர்காலத்தில் என்னால் பொலன்னறுவைக்கு செல்ல முடியாமல் போகலாம் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உரத்தின் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளை இழந்து விட்டார்கள். சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய சோகம் விவசாயத்தில் காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
“இந்த நிலைமையில் இன்னும் சில நாட்களின் பின்னர் என்னாலும் பொலன்னறுவைக்குச் செல்ல முடியுமா என்று தெரியவில்லை. விவசாயிகளின் உந்துதல், உணர்திறன், அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக என்னையும் வரவேண்டாம் என்று சொல்ல முடியும்“ என்றார்.




