கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட விநாயகர் குடியிருப்பு பகுதியில் தனது மகளான 5 வயது சிறுமிக்கு நெருப்பால் சூடு வைத்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாயார் சமைத்து வைத்த உணவின் பப்படத்தை, 5 வயது மகள், தாயாருக்கு தெரியாமல் எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாயார், தனது 5 வயது மகளின் வாயில் நெருப்பால் சுட்டுள்ளார்.
சம்பவத்தை அவதானித்த சிறுமியின் பேரன் அக்கராயன் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து தாயாரை பொலிசார் கைது செய்தனர். இன்று (9) சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதான தாயார் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
1
+1
+1
1