27.7 C
Jaffna
December 20, 2024
Pagetamil
குற்றம்

தெரியாமல் அப்பளம் எடுத்த சாப்பிட்ட 5 வயது மகளின் வாயில் சூடு வைத்த கொடூர தாய்: கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட விநாயகர் குடியிருப்பு பகுதியில் தனது மகளான 5 வயது சிறுமிக்கு நெருப்பால் சூடு வைத்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாயார் சமைத்து வைத்த உணவின் பப்படத்தை, 5 வயது மகள், தாயாருக்கு தெரியாமல் எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாயார், தனது 5 வயது மகளின் வாயில் நெருப்பால் சுட்டுள்ளார்.

சம்பவத்தை அவதானித்த சிறுமியின் பேரன் அக்கராயன் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து தாயாரை பொலிசார் கைது செய்தனர். இன்று (9)  சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தை தொழிலுக்குச் சென்ற சமயம் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

கைதான தாயார் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

குடு சலிந்து பிணையில் விடுதலை!

Pagetamil

வசமாக சிக்கிய ஜோடி!

Pagetamil

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

Pagetamil

போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

Pagetamil

UPDATE: கணவருடன் அடிக்கடி சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிததற்கு காரணம் இதுவா?: மனைவியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

Pagetamil

Leave a Comment