.பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர் பவானி ரெட்டி அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார். முதல் கணவர் தற்கொலை செய்தது, இரண்டாவது திருமணமும் நிலைக்காமல் போனது பற்றி அவர் உருக்கமாக பேசினார் .
பிக்பாஸ் முதல் வாரத்தில் போட்டியாளர்கள் அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதையாக சொல்ல வேண்டும் எனவும், அதற்கு மற்றவர்கள் லைக் டிஸ்லைக் அல்லது ஹார்டின் கொடுக்க வேண்டும் எனவும் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.
பவானி ரெட்டியும் அவரது கதையை சொன்னார்.
“என் பெயர் பவானி ரெட்டி. அப்பா அம்மா வைத்த பெயர் துர்கா. நான் வேலைக்கு போனேன், அதில் எனக்கு அதிகம் ஆர்வம் வரவில்லை. ஒருமுறை பேப்பர் விளம்பரம் பார்த்து போன் செய்தேன். போட்டோ எடுத்துக்கொண்டு அடிஷனுக்கு வர சொன்னார்கள். நான் பாஸ்போர்ட் போட்டோ எடுத்துக்கொண்டு போனேன். அங்கு போனால் ஸ்டுடியோவில் முழு அளவு போட்டோ எடுத்து வர சொன்னார்கள்.
அதன் பின் படங்கள் சீரியல் என வாழ்க்கை போய்க்கொண்டு இருந்தது. அப்போது லவ் ஸ்டோரி ஸ்டார்ட் ஆனது. படத்தில் பணியாற்றும் போது ப்ரதீப்புடன் அறிமுகம் கிடைத்தது. அவர் பார்க்க அழகாக இருப்பார், டான்சராக இருந்தார் .
அதன் பின் காதல் பற்றி அப்பா அம்மாவிடம் சொன்னேன். அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். இருவருமே சீரியல்களில் நடிக்க தொடங்கினோம். 4 வருடமாக லிவ் இன் reationshipல் இருந்தோம். அதன் பின் திருமணம் செய்துகொண்டோம். வீடு ஒன்றையும் வாங்கி இருந்தோம். நான் 6 மாதம் கர்பமாக இருந்தேன், அதனால் சீரியலில் நடிப்பதை நிறுத்தச்சொன்னார் டாக்டர். ஆனால் அது miscarriage ஆகிவிட்டது.
எனக்கு அண்ணன் போல ஒருவர் இருக்கிறார். அவரது பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்தோம். அங்கு கணவர் அதிகம் குடித்துவிட்டார். அதன் பின் சிகரெட் வாங்க போகிறேன் என சொன்னார். நான் வேணாம் என சொன்னேன். அவர் கேட்கவில்லை.
அவர் கார் எடுத்துக்கொண்டு வெளியில் போய்விட்டார். விபத்து செய்துவிடுவாரோ என பயந்தேன். நான் போன் செய்தாலும் எடுப்பதில்லை. அவர் வந்தபிறகு கோபமாக பேசினேன். ‘நான் எல்லோரையும் விட்டுவிட்டுத் வந்தேன், உனக்கு எதாவது ஆனால் என்ன ஆகும்’ என கேட்டேன்.
நான் பாத்ரூமுக்கு சென்று பேசாமல் இருந்தேன். அவர் கண்ணாடியை உடைத்து கையில் ரத்தம். அவர் இப்படி செய்தால் நான் வீட்டை விட்டு சென்றுவிடுவேன் என சொன்னேன்.
எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லையா என கேட்டுவிட்டு அவர் அறைக்கு சென்று லொக் செய்து விட்டார்.
என்னை பயமுறுத்த அவர் இவ்வாறு செய்வதாக நினைத்து ஹாலில் தூங்கி விட்டேன்.

அவரது பெற்றோர் மற்றும் என் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தேன். அவர்கள் வந்தார்கள், போலீசும் வந்தார்கள்.
என் கணவர் இறந்ததை பார்த்து எனக்கு அழுகை வரவில்லை, கோபம் தான் வந்தது. ஏன் பாதியில் விட்டுவிட்டு போனாய் என தான் கேட்டேன்.
நான் தான் கணவரை என் அண்ணன் உடன் சேர்ந்து திட்டம் போட்டு கொன்றுவிட்டேன் என சர்ச்சை ஆனது. அவர் சொந்த அண்ணன் இல்லை என்பதால் அவருடன் எனக்கு தொடர்பு இருந்தது என்று கூட குற்றச்சாட்டு வைத்தார்கள். இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்து பேட்டி கொடுத்தால் அது தவறாக தான் போகும் என போலீஸ் அட்வைஸ் செய்தார்கள். அதனால் நானும் அமைதியாக இருந்தேன்.
இரண்டாம் திருமணம்
எனக்கு என் கணவரின் குடும்பம் தான் ஆறுதலாக இருந்தது. என் மாமியார் என்னுடன் அன்பாக இருந்தார். அந்த நேரத்தில் அவர்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் கூட கோபம் வந்திருக்கும்.
அதற்கு பிறகு சில வருடங்களில் இன்னொருவர் எனக்கு லவ் பீலிங் கொடுத்தார். திருமணம் செய்துகொண்டோம், ஆனால் அதுவும் ஒர்கவுட் ஆகவில்லை. அப்போது தான் எனக்கு தோன்றியது, நான் வாழ்க்கை முழுவதும் தனியாக தான் இருக்க வேண்டுமோ என தோன்றியது.
அந்த மன அழுத்தத்தில் இருந்த நேரத்தில் தான் பிக் பாஸ் வருகிறீர்களா என அழைப்பு வந்தது. வந்துவிட்டேன் என தன் கதையை சொல்லியுள்ளார் பவானி ரெட்டி.