சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவுள்ள படத்துக்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதால், சுராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் வடிவேலு. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. முதலில் இந்தப் படத்துக்கு ‘நாய் சேகர்’ எனத் தலைப்பு வைக்க முடிவு செய்தார்கள். ஆனால், சதீஷ் நடித்துள்ள படத்துக்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வடிவேலு – சுராஜ் கூட்டணி தங்களுடைய படத்துக்கு புதிய தலைப்பு குறித்து பரிசீலித்து வந்தது. இறுதியாக ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் வடிவேலு உடன் நடிக்க முன்னணி நாயகியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இவர் வடிவேலு நாயகியாக அல்லாமல் வேறொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
நீண்ட நாட்கள் கழித்து வடிவேலு நடிக்கவுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இருப்பதால், அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் உற்சாகமாகப் பகிர்ந்து வருகிறார்கள்.
Vandhutanya Vandhutanya!!! 📣
🤓 Here is the First Look of all time Entertainer #Vaigaipuyal #Vadivelu in #NaaiSekarReturns@Director_suraaj @Music_Santhosh @UmeshJKumar @dharmachandru @Yuvrajganesan @proyuvraaj @teamaimpr pic.twitter.com/KoFsShV267— Lyca Productions (@LycaProductions) October 8, 2021