பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியானதை தொடர்ந்து தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ச ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறி. தெரியாத இடத்திற்கு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளை அவர்கள் மறுத்துள்ளனர்.
“நாங்கள் வேறு எந்த நாட்டிற்கும் ஓடவில்லை, நாங்கள் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு சுயாதீன விசாரணைக்கு நான் கோரியுள்ளேன், அதனால் நானும் என் மனைவியும் ஏன் வெளியேற வேண்டும்? இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை” என்று நடேசன் கூறினார்.
இன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னிலையாகி, குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பார் என்றும் திருக்குமரன் நடேசன் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1