முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்ப வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை, சமூக இடைவெளியை பேணி தள்ளி நிற்குமாறு கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
மீகொடவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நேற்று (6) காலை 6 மணியளவில் இந்த சம்பவம்
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெற்றோல் நிரப்ப முயன்றனர். மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் முகக்கவசம் அணியாததால், சமூக இடைவெளியை பேணி சற்று தள்ளி நிற்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டனரரும், அவருடன் வந்தவரும், எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியரை கடுமையாக தாக்கினர்.
தாக்குதலை தடுக்க வந்த மற்றொரு ஊழியரும் தாக்கப்பட்டார். அவர் தப்பியோடி விட்டார்.
தாக்குதலை நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் இருப்பின் 0718592179 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு மீகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நெவில் பிரியந்த, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.