2021ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு இரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நோர்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
அந்த வகையில் வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட், பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் மெக்மில்லன் ஆகியோருக்கு இவ்வாண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தரப்பில் அறிவிக்கப்பட்டது,
இரு விஞ்ஞானிகளும் வேதியியல் மூலக்கூறு கட்டுமானத்திற்கான புதிய மற்றும் தனித்துவமான வினையூக்கி (asymmetric organocatalysis ) கருவியை உருவாக்கியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
வேதியியலில் இருவித வினையூக்கிகளே (உலோகங்கள் மற்றும் நொதிகள்) உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலமாக நினைத்துவந்த சூழலில், இவர்களின் இந்தக் கண்டுபிடிப்பு புதிய மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு உதவிகரமாக அமைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS:
The 2021 #NobelPrize in Chemistry has been awarded to Benjamin List and David W.C. MacMillan “for the development of asymmetric organocatalysis.” pic.twitter.com/SzTJ2Chtge— The Nobel Prize (@NobelPrize) October 6, 2021