25.3 C
Jaffna
December 19, 2024
Pagetamil
இலங்கை

யாழ் பத்திரிகை வெளியிட்ட போலிச் செய்தி: உண்மையை தெளிவுபடுத்திய கஜேந்திரகுமார் எம்.பி!

தமிழர் பிரச்சினைக்கு அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் உள்ளடங்கலாக ஒற்றையாட்சிக்குள் தீர்வினை வழங்கக்கூடிய எந்தவொரு யோசனையையும் இந்தியா முன்வைக்கக்கூடாது என்று அந்நாட்டு வெளியுறவுச்செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுடனான சந்திப்பின்போது வலியுறுத்தியதாக தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கும் நலன்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் இந்திய வெளியுறவுச் செயலரிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளியுறுவு செயலாளருடனான சந்திப்பில். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதுவும் பேசவில்லையென யாழ்ப்பாணத்திலிருந்த வெளியாகும் ஈழநாடு பத்திரிகையில் வெளியான போலிச் செய்தி தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று புதன்கிழமைஇந்த செய்தியாளர் சந்திப்பு நடந்தது.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

தமிழர்களின் பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்கவேண்டும் என்பதே இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடாக இருந்து வருவதாக தெரிவித்த இந்திய வெளியுறவுச்செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, அதனை எதிர்வருங்காலங்களிலும் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டார்.

மறுபுறம் இந்திய வெளியுறவுச்செயலருக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களின் வாயிலாக அறிந்து கொண்டோம்.

அதன்படி நாம் கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கு 11 வருடங்களுக்கு முன்னர் எம்.கே.நாராயணன் இலங்கை வந்தபோது வலியுறுத்தப்பட்ட அதே விடயங்கள்தான் இப்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.

இதிலிருந்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு, தமிழ்த்தேசியத்தைப் புறக்கணித்து, தமிழர்களின் அபிலாஷைகளைக் கைவிடுகின்ற கூட்டமைப்பின் போக்கு மீண்டும் மீள உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஒற்றையாட்சியின் கீழான தீர்வை நிராகரிக்கின்ற பொறுப்பு தமிழ்மக்களின் கைகளிலேயே இருக்கின்றது.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்க்ததினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் 13 வது திருத்தத்தின் ஏற்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டு, ஒற்றையாட்சியின்கீழ் தீர்வை வழங்குவது குறித்த சர்வசன வாக்கெடுப்பில் மக்கள் அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டியது அவசியமாகும்.

இந்திய வெளியுறவுச்செயலருடனான எமது சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்களுக்குப் புறம்பான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கமொன்று எழுதப்பட்டிருக்கின்றது

13 வது திருத்தத்தின் ஊடாகத் தமிழ்மக்களுக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று வெளியுறவுச் செயலர் வலியுறுத்தியபோது அதனை நாம் மறுக்கவில்லை என்றும் யதார்த்த அரசியலை விளங்கிக்கொண்டு, ஏனையோரைப் போன்ற முகவர்களாக செயற்படுகின்றோம் என்றும் பொருள்படும்வகையில் அந்த ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டிருக்கின்றது. இதுகுறித்து நாம் அப்பத்திரிகையின் உரிமையாளர் மற்றும் ஆசிரியருக்குத் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.

இனிவருங்காலங்களில் எமது கட்சியுடன் தொடர்புடைய விடயங்களை எழுதும்போது, அத்தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து எம்மிடம் கேட்டறிந்து தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

கோட்டாவின் ஆட்சிக்காலத்தில் நடந்த மற்றொரு பெரும் மோசடி: அனுர அரசு அம்பலப்படுத்தியது!

Pagetamil

இலங்கையில் இந்தியாவுக்கான சந்தை

east tamil

யாழில் எலிக்காய்ச்சலால் 110 பேர் பாதிப்பு!

Pagetamil

நகைச்சுவையாளர்களால் நிரம்பிய இலங்கை நாடாளுமன்றம் – முன்னாள் ஆளுநர்

east tamil

Leave a Comment