இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறலுக்கு எதிராக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன துணை தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவாகார செயலருடன் தமிழ் அரசியல் வாதிகள் எவரும் மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசவில்லை. தமது பிரச்சினையை பேசுவதற்கு யாரும் இல்லை. இந்நிலையிலேயே தாம் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்யவுள்ளதாகவும், தமது மீனவர்கள் பல கோடி சொத்துக்களை இதுவரை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1