25.4 C
Jaffna
December 24, 2024
Pagetamil
இந்தியா

209 நாட்களில் பின் இந்தியாவின் கொரோனா தொற்று குறைந்தது!

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த 209 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

அதன்படி, நேற்று ஒரே நாளில் 18,346 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 8,850 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதுபோலவே நேற்று ஒரே நாளில் 180 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில் கேரளாவில் மட்டும் 149 பேர் பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,52,902 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 18,346

இதுவரை குணமடைந்தோர்: 3,31,50,886

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 29,639.

கொரோனா உயிரிழப்புகள்: 4,49,260

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 263

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,52,902

இதுவுரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 91.54 கோடி பேர்.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

Leave a Comment