Pagetamil
முக்கியச் செய்திகள்

வழக்கு தொடர்ந்த 8 தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்த எட்டு கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடுமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகள் சார்பில், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் அச்சுறுத்தல் நடவடிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அண்மையில் மதுபோதையில் சிறைச்சாலைக்கு சென்று, தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டியதுடன், தலையில் துப்பாக்கியை வைத்து கொலை மிரட்டலும் விடுத்திருந்தார். இதற்கு எதிராக தமிழ் அரசியல் கைதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, பிரதம நீதியரசர் ஜெயந்த ஜயசூரிய, நீதிபதி முர்து பெர்னாண்டோ மற்றும் நீதிபதி எஸ்.துரைராஜா அடங்கிய உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம் முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த கைதிகளை சட்டத்தரணிகள் அணுகுவதற்கான உரிமைகளை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு ஒக்டோபர் 21 ஆம் திகதி மீள விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை 2021 செப்டம்பர் I2 ஆம் திகதி அனுராதபுரம் சிறையில் செய்ததாகக் கூறப்படும் கடுமையான குற்றங்களுக்கு உத்தரவிடக் கோருகின்றனர்.

அத்துடன், தங்கள் மீதான வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட வட மாகாண சிறைகளுக்கு மாற்ற இடைக்கால உத்தரவு கோருகின்றனர்.

லொஹான் ரத்வத்தையின் அடாவடி பற்றி அரசியல் கைதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-

செப்டம்பர் 12 ஆம் திகதி மாலை 6.05 மணியளவில், கைதிகள் பத்து பேரும் சிறை வளாகத்தின் முற்றத்திற்கு அழைக்கப்பட்டனர். இராஜாங்க அமைச்சரும் அவரது செயலாளராகத் தோன்றிய மற்றொரு நபரும், அவருடைய பாதுகாவலர்களை போல தோற்றமளிக்கும் வேறு சிலரும் மற்றும் சில சிறைக்காவலர்களும் அங்கு இருந்தனர்.

அரசியல் கைதிகளை அரை வட்டத்தில் நிற்குமாறு இராஜாங்க அமைச்சர் சொன்னதாகவும் அவர் முன் மண்டியிட உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி தனக்கு வழங்கியுள்ளதாகவும், அவர்களை விடுவிக்கலாம் அல்லது சுட்டுக் கொல்லலாம் என்றும் சிங்கள மொழியில் இராஜாங்க அமைச்சர்  துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார். அமைச்சரின் கையில் கைத்துப்பாக்கி இருந்தது. அவர் போதையில் இருந்ததாகவும் தெரிகிறது.

அரசியல்எகைதிகள் ஒவ்வொருவரும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை கூறும்படி இராஜாங்க அமைச்சர் உத்தரவிட்டார். சிறிதுநேரம் அரசியல் கைதிகளை வாய்மொழி மூலம் துஷ்பிரயோகம் செய்த லொஹான் ரத்வத்தை,  பின்னர் எட்டு அரசியல் கைதிகளை உள்ளே செல்ல உத்தரவிட்டார். கைதிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சியிலும் பயத்திலும் இருந்தனர். பின்னர், அமைச்சர் சிறையிலிருந்து வெளியே சென்றதாகவும், பயப்பட வேண்டாம் என்றும் அதிகாரிகள் அவர்களிடம் கூறினர், ”என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.

மனுதாரர்கள் பிரிவு 12 (1) மற்றும் 12 (2) ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் பிரதிவாதிகளால் மீறப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என்றும்,  தங்களை பிணையில் விடுவிக்க இடைக்கால உத்தரவையும் கோருகின்றனர்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, நீதி அமைச்சர் அலி சப்ரி, அனுராதபுரம் சிறை கண்காணிப்பாளர் எம்.எச்.ஆர்.அஜித், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உபுல்தெனிய மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டனர்.

மோகன் பாலேந்திரன் சட்டநிறுவனத்தின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி ரி.ஜெயசிங்கம் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

இதையும் படியுங்கள்

பிள்ளையான் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்: 90 நாட்கள் தடுப்புக்காவல்!

Pagetamil

இனி அமெரிக்காவின் இடத்தை நாம் தீர்மானிக்க வேண்டும்!

Pagetamil

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!