27.1 C
Jaffna
January 12, 2025
Pagetamil
இலங்கை

கைகள் கட்டப்பட்டு இளம் பெண்ணின் சடலம்; அருகில் இளைஞனின் சடலம்!

மீரிகம, லிந்தர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளம் ஜோடியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

26 வயதான கணவர் மற்றும் 23 வயதான மனைவியே சடலமாக மீட்கப்பட்டனர்.

இறந்த பெண்ணின் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் சேலையால் சுருக்கிடப்பட்டிருந்தது. அதே சேலையின் மறு முனையில் கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

தமது 4 வயது மகனை கவனித்துக் கொள்வது குறித்து சகோதரரிற்கு எழுதிய சிறிய குறிப்பும் காணப்பட்டது.

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் அந்த ஜோடிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இறந்த இளம் பெண்ணின் சகோதரரின் திருமணத்திற்காக குடும்பம் வீட்டை விட்டு வெளியேறியது. ஆனால் இறந்த பெண் மட்டும் வீட்டில் இருந்ததாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமணத்திற்கு சென்ற கணவர், தனது 4 வயது மகனை அங்கே ஒப்படைத்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.

அந்த வீட்டிலிருந்து அவலக்குரல் கேட்டதையடுத்து, அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் சடலங்களை மீட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காலமானார்

east tamil

மனைவியின் காதை வெட்டிய கணவனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

east tamil

ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

east tamil

ஊடக சுதந்திரத்திற்கான புதிய தருணம்: பழிவாங்கலுக்கு இடமளிக்க முடியாது – நலிந்த ஜயதிஸ்ஸ

east tamil

ஆரோக்கியமும் அறிவுத்திறனும் இணையும் கிளீன் ஸ்ரீலங்கா உத்தி – இரவீ ஆனந்தராஜா

east tamil

Leave a Comment