அம்பன்பொல தெற்கு பிரிவின் கிராம உத்தியோத்தர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பன்பொல பிரதேச செயலகத்தில் சேவையாற்றும் எஸ்.எம்.கபில பிரியந்த சபுகுமார என்ற 3 பிள்ளைகளின் தந்தையான 51 வயதானவர் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார்.
அம்பன்பொல பிரதேச செயலகத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த கிராம உத்தியோகத்தர், வேனில் வந்த இனந்தெரியாத குழுவால் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.
ஹிக்கடுவவில் உள்ள குழுவொன்றிடம் ஒன்றரை இலட்சம் ரூபா ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழுவே, கிராம சேவகரை கொலை செய்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1