மீரிகம, லிந்தர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளம் ஜோடியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
26 வயதான கணவர் மற்றும் 23 வயதான மனைவியே சடலமாக மீட்கப்பட்டனர்.
இறந்த பெண்ணின் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் சேலையால் சுருக்கிடப்பட்டிருந்தது. அதே சேலையின் மறு முனையில் கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
தமது 4 வயது மகனை கவனித்துக் கொள்வது குறித்து சகோதரரிற்கு எழுதிய சிறிய குறிப்பும் காணப்பட்டது.
ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் அந்த ஜோடிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இறந்த இளம் பெண்ணின் சகோதரரின் திருமணத்திற்காக குடும்பம் வீட்டை விட்டு வெளியேறியது. ஆனால் இறந்த பெண் மட்டும் வீட்டில் இருந்ததாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த வீட்டிலிருந்து அவலக்குரல் கேட்டதையடுத்து, அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் சடலங்களை மீட்டனர்.