திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களை கைப்பற்ற ஒரு மோசடி ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காகவே இந்திய வெளியுறவு செயலாளர் விஜயம் செய்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
கேகாலையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
திருகோணமலையில் மீதமுள்ள 85 எண்ணெய் குதங்களைக் கைப்பற்றுவதற்காக இந்திய வெளியுறவுச் செயலாளர் நாட்டிற்கு வந்ததாக அவர் கூறினார்.
தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அரசு சொத்துக்களை விற்க என்ன அதிகாரம் உள்ளது,
இது குற்றம். அரச வளங்களை தன்னிச்சையாக விற்பனை செய்வதற்கு எதிராக பொதுமக்கள் ஒன்று திரள வேண்டும் என்று தேரர் கூறினார்.
பல்வேறு குரல்கள் எழுப்பப்பட்டாலும், ஜனாதிபதிக்கு இது போன்ற விஷயங்கள் தெரியாது என்று தெரிகிறது. எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவதில் அவருக்கு விருப்பம் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.
ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் எத்தியோப்பியா போன்ற அதே தலைவிதியை நாடு சந்திக்குமா என்றும் தேரர் கேள்வி எழுப்பினார்.