பயணிகள் பேருந்துகளில் சுகாதார நடைமுறை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது இன்று (4) முதல் தீவிரமாக கண்காணிக்கப்படும். இருக்கையின் அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை இன்று முதல் பொலிசார் கைப்பற்றுவார்கள் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இருக்கை திறனுக்கு அதிகமாக- பயணிகள் நின்றபடி பயணிக்கும் பேருந்துகளை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
மறு அறிவித்தல் வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும்.
பொலிசாரால் கைப்பற்றப்படும் பேருந்துகளின் வழித்தட அனுமதியையும் போக்குவரத்து அமைச்சு இரத்து செய்யும் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1