25.6 C
Jaffna
January 22, 2025
Pagetamil
சினிமா

200 கோடி ரூபா ஜீவனாம்சத்தை மறுத்தாரா சமந்தா?

பிரபல நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் இன்று தங்களது சமூக வலைத்தளத்தில் கணவன் மனைவியாக பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இந்த அறிவிப்பு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நாகசைதன்யா குடும்பத்தினர் சமந்தாவுக்கு ரூபாய் 200 கோடி ஜீவனாம்சம் தர முன் வந்ததாகவும் அந்த பணத்தை வாங்க சமந்தா மறுத்து விட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

பிரபல நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை நல்ல முறையில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து இருவரும் பிரிய முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன்னர் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் கணவன் மனைவியாக இருவரும் பிரிய இருப்பதை உறுதி செய்ததோடு தங்கள் நட்பை தொடர உள்ளதாக தெரிவித்தனர். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நாகார்ஜுனா குடும்பத்தினர் சமந்தாவுக்கு ரூபாய் 200 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாகவும் ஆனால் தன்னைப் பார்த்துக் கொள்ள தனக்கு தெரியும் என்றும் ஜீவனாம்சம் தேவையில்லை என்று சமந்தா கூறியதாகவும் தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் கூறி வருகின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

Leave a Comment