மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஜானம், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், மாநகர ஆணையாளர் மற்றும் இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1