பஹந்துடாவ நீர்வீழ்ச்சியில் ஆபாச வீடியோ பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட ஜோடிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் அந்த ஜோடி குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அவர்களிற்கு ரூ. 10,800 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், 7 ஆண்டுகளிற்கு ஒத்திவைக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
முடக்க காலப்பகுதியில் பஹந்துடாவ நீர்வீழ்ச்சிக்கு சென்ற இந்த ஜோடி, அங்கு உடலுறவு கொண்டு அதை வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் அதை ஆபாச இணையங்களிற்கு விற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன், சமூக ஊடகங்களிலும் வெளியிட்டனர். இந்த ஜோடி, ஏற்கனவே பல ஆபாச வீடியோக்களை உருவாக்கி விற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்பிட்டியைச் சேர்ந்த 24 வயது பெண்ணும், மகரகமவைச் சேர்ந்த 34 வயது ஆணுமே கைது செய்யப்பட்டிருந்தனர்.