காட்டுப்பகுதியில் காணாமல் போன ஒருவரை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களிற்கு உள்ளூர் மக்களும் உதவும் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதலில் பங்கெடுத்த ஒருவர், நீண்ட நேரத்திற்கு பின்னரே அறிந்து கொண்டார், தன்னையே தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது.
அதாவது- தன்னைத்தானே அந்த நபர் தேடிக் கொண்டிருந்துள்ளார்.
துருக்கியின் புர்சா (Bursa) வட்டாரத்தில், கடந்த செப்ரெம்பர் 28ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.
அனேகல் நகருக்கு அருகிலுள்ள சாயாகாவின் அருகிலுள்ள பகுதியில் பேஹன் முட்லு என்ற 53 வயதானவர் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். மதுபோதையில் எழுந்து சென்றவர், அந்த குழுவிலிரு்து வழிதவறி விட்டார்.
அவரது நண்பர்களும், உறவினர்களும் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.
பொலிசார் மற்றும் மீட்புக் குழுக்கள் அந்த நபரைத் தேடத் தொடங்கினர். தகவறிந்து, உள்ளூர் மக்களும் அந்த தேடுதலில் இணைந்தனர்.
தேடுதல் பணியில் ஈடுபட்டவர்கள், சிறிது நேரத்தில் முட்லுவின் பெயரைக் குறிப்பிட்டு, சத்தமிட்டு அழைத்தனர்.
இதன்போது, தேடுதலில் ஈடுபட்டவர்களிற்குள்ளிருந்து, “நான் இங்கே தான் இருக்கிறேன்” என்று முட்லு பதிலளித்துள்ளார்.
உங்களைத்தான் இதுவரை தேடிக் கொண்டிருக்கிறோம் என கூறி, அவரை அழைத்துச் சென்று வீட்டில் விட்டுள்ளனர்.
அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
Bursa'nın İnegöl ilçesinde, Beyhan Mutlu isimli şahıs, kendisi için başlatılan arama çalışmalarını başkası için zannederek saatlerce kendini aradı.
Ekipler, arama çalışmasıyla ilgili tutanak düzenleyip kayıp şahsı evine bıraktılar. pic.twitter.com/yhVaPSh7wY
— Vaziyet (@vaziyetcomtr) September 28, 2021
இந்த சம்பவம் இணையங்களில் வைரலாகியுள்ளது.