இலங்கைக்கு அருகாமையில் வளிமண்டல தளம்பல் நிலை உருவாகியுள்ளதால் இன்றும், நாளையும் (ஒக்டோபர் 1, 2ஆம் திகதிகள்) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1