சீனாவில் கொரோனா தொற்றிற்குள்ளான 3 பூனைகள் கொலை!

Date:

சீனாவின் வடகிழக்கு நகரமான ஹார்பினில் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. அங்கு கொரோனா தொற்றிற்குள்ளான மூன்று பூனைகளை கொலை செய்தது பெரும் சர்ச்சையாகியுள்ளது

கொரோனாவை கட்டுப்படுத்த பூனைகளை கொன்றோம் என உள்ளூர் அதிகாரிகள் விளக்கமளிக்க, சீனாவில் இப்படித்தான் மனிதர்களிடமும் கொரோனாவை கட்டுப்படுத்தினீர்களா என நெட்டிசன்கள் சீனா அரசாங்கத்தை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

பூனைகளின் உரிமையாளர், கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று பூனைகள் கருணைக்கொலை செய்யப்படும் என்று அவரது குடியிருப்பு வாசிகள் அறிவித்ததாக கூறினார்.

உரிமையாளரான பெண் சிகிச்சைக்கு செல்வதற்கு முன்னர், பூனைகளிற்கு உணவு, தண்ணீர் வைத்துவிட்டே சென்றிருந்தார்.

“இதுபோன்ற சூழ்நிலைகளில், அவர்களை கவனித்துக் கொள்ள முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவை எனக்கு மிகவும் முக்கியம்” என்று சீனாவின் சமூக ஊடகத்தில் அதன் உரிமையாளர் செவ்வாய்க்கிழமை பதிவிட்டார்.

இதையடுத்து, ஏராளமானவர்கள் அந்தப் பூனைகளிற்காக பிரார்த்தித்து, அவற்றை கொல்லக்கூடாதென வலியுறுத்தினர். அவற்றை மீட்பது பற்றியும் நெட்டிசன்கள் கருத்திட்டனர்.

எனினும், செவ்வாய்க்கிழமை இரவு, அவர் இட்ட மறு பதிவில் பூனைகள் கொல்லப்பட்டு விட்டன என்பதை குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றிற்குள்ளான மனிதர்களிற்கே சிகிச்சையளிக்க முடியும்.  தொற்றிற்குள்ளான பூனைக்கு சிகிச்சை அளிக்க இடமில்லை. பூனைகள் கொல்லப்படா விட்டால், கட்டிடம் முழுவதும் தொற்று பரவும். உரிமையாளர் வீடு திரும்ப முடியாது, அல்லது கட்டிடத்தில் யாரும் வசிக்க முடியாது. அவற்றிற்கு இரண்டு முறை பரிசோதனை செய்தோம். தொற்று உறுதியாகியிருந்தது என உள்ளூர் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் சிகிச்சையளிப்பது பற்றிய சட்டத்தின்படி, தொற்றுநோய் பரவும் போது விலங்குகளை கட்டுப்படுத்தலாம் அல்லது கொல்லலாம் என்றும் குறிப்பிட்டனர்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய பின்னர், பல்வேறு நாடுகளில் நாய்கள், பூனைகள் மற்றும் புலிகள் உட்பட பல விலங்குகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. எனினும், எந்த நாட்டிலும் செல்லப்பிரணிகளை கொல்லவில்லை. சாதாரண சிகிச்சை மூலம் குணப்படத்தினர்.

எனினும், சீனாவின் நடவடிக்கை பரவலான விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்கள். சிலர் ஒருபடி மேலே போய், முதலாவது அலையில் இப்படித்தான் சீனாவில் தொற்றை கட்டுப்படுத்தினீர்களா என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்