யார் எடுத்த முடிவு?

Date:

விமான நிலையங்களின் ஊடாக நாட்டுக்குள் நுழையும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானப் பயணிகளை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தாது, நாட்டுக்குள் அனுமதிப்பது அறிவியல் அடிப்படையற்ற, தன்னிச்சையான முடிவாகும் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சுகாதார தொழிற்றுறையின் நிபுணர் சங்கத்தின் தலைவரும், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான ரவி குமுதேஷ் மேற்கண்டவாறு குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இந்தத் தீர்மானம் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் எடுக்கப்பட்டதா அல்லது யாராவது கழுத்தில் கத்தியை வைத்தமையால் எடுக்கப்பட்ட முடிவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எவ்வாறாயினும், முழு நாட்டையும் பணயம் வைத்து எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு
தொழில்நுட்ப ஆலோசனை வழங்கிய குழுவின் ஆலோசனைகளை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

தொற்று, தொற்றிக்கொள்ளல் அல்லது பரவுதலை தடுப்பதற்கு எவ்விதமான தடுப்பூசிகளும் இன்றுவரையிலும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. ஆகையால், தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்கள் “ கொரோனா தொற்று அல்லாதவர்கள்” என கருதி எடுக்கப்பட்ட தீர்மானத்தில் பெரிய அபத்தம் உள்ளது. நம் நாட்டில் வழிகாட்டும் வல்லுநர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தடுப்பூசியை தயாரித்த நிறுவனத்திற்கு கூட இல்லாத நம்பிக்கையை எப்படிப் பெற்றார்கள் என்பது ஒரு மர்மம் என்றார்.

தடுப்பூசி தயாரிக்கும் நாடுகள் உட்பட உலகில் எந்த நாட்டிற்கும் தடுப்பூசி மீது அவ்வளவு
நம்பிக்கை இல்லை, தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க நீண்ட கால பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய ஒரு நாடு, இவ்வாறான முடிவை எடுது்துள்ளமை நாட்டை பேரழிவுக்குள் தள்ளிவிடும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: விசாரணை நவம்பர் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்