‘தமிழ் தேசிய குழந்தை’: அறியாமல் கதைத்த சாணக்கியனிற்கு சாட்டையடி கொடுத்த ஜனா!

Date:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் சில காலம் ரெலோ அமைப்பில் இணைந்திருந்தார் என ரெலோ அமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தம் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தரப்பினால் அரசியலிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து, “தீவிர தேசியவாதியாக“ மாறியுள்ள மட்டக்களப்பு எம்.பி இராஜபுத்திரன் சாணக்கியன் அண்மையில் போதிய விளக்கமின்றி ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தரப்புக்கள் ஒன்றாக கடிதம் அனுப்பியதால் எம்.ஏ.சுமந்திரன் அணி கொதிப்படைந்திருந்தது. அந்த அணியின் சாணக்கியன், “ரெலோவினர் தாங்களும் ஒரு கட்சியை வைத்திருக்கிறோம் என காட்ட கடிதம் அனுப்பினார்கள்“ என்ற சாரப்பட, கருத்து தெரிவித்திருந்தார்.

போராட்ட வரலாறே அறிந்திராத சாணக்கியன், ரெலோவை அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். சாணக்கியனின் இந்த விடலைத்தனமாக கருத்திற்கு, ரெலோ பொதுச்செயலாளர் கோவிந்தன் கருணாகரம் பதிலளித்துள்ளார்.

“தமிழ் தேசிய குழந்தைகள்“ என அவர் மறைமுகமாக சாணக்கியனை சுட்டிக்காட்டி, வரலாறு தெரியாமல் தமிழ் அரசு கட்சியின் சில எம்.பிக்கள் பேசுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

‘எனது கணவர்… மன்னிக்கவும், எனது ஜனாதிபதி’: இணையத்தில் கிண்டலடிக்கப்படும் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர்!

கரோலின் லெவிட் (Karoline Leavitt) என்பவருக்குப் பதிலாக வெள்ளை மாளிகையின் புதிய...

கொளத்தூரில் ஸ்டாலின் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்: திருமாவளவன் பேச்சு!

“கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என ஸ்டாலினிடம் முன்பே சொன்னேன்....

சிஜேபியின் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நாளை (அக்.16) நடத்த உள்ள மூவர்ணக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்