29.5 C
Jaffna
April 11, 2025
Pagetamil
சின்னத்திரை

இந்து பையனுடன் காதல்… புகைப்படத்துடன் அறிவித்த பார்வதி!

சின்னத்திரையில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை ஷபானா. முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்து அம்மாவின் துணையுடன் திரையில் நடிக்கும் தன்னுடைய கனவை நினைவாகி உள்ளார்.

கேரளாவில் பிறந்து, மும்பையில் வளர்ந்த ஷபானா, விஜயதசமி என்ற மலையாள சீரியலில் கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் செம்பருத்தி சீரியலில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் சின்னத்திரையில் உச்ச நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் சீரியலில் நடிக்கும்போது பொட்டு வைப்பதற்கும், இந்து பையனுடன் காதல் காட்சியை நடிப்பதற்கும் ஷபானாவின் சொந்தபந்தங்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நடித்து வருகிறார்.

ஷபானாவின் திருமணம் மற்றும் காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் உலாவியது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஷபானா நீண்ட நாட்களாக காதலித்துக் கொண்டிருந்த, நடிகர் ஆர்யன் உடன் மோதிரத்தை மாற்றிக் கொள்ளும் திருமண நிச்சயம் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார்.

நடிகர் ஆர்யன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

படுக்கைக்கு அழைத்த சீனியர் காமெடி நடிகர்.. கேரவனுக்கு இரகசியமாக அழைத்த நடிகை!

Pagetamil

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

‘யானை மிதித்து சாகக் கிடந்தேன்… தூக்கிச் சென்றவன் என் மார்பை பிடித்து சுகம் கண்டான்’: பிரபல தமிழ் சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்!

Pagetamil

கணவனை பற்றி வதந்தி பரப்பாதீர்கள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!