டொலர் பற்றாக்குறையால் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியிருந்த 800 கொள்கலன்களில் சுமார் 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர், இன்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை நேற்று (27) இரவு எடுத்த தீர்மானத்துக்கமைய மத்திய வங்கி டொலர்களை வெளியிட்டால், ஒரு வாரத்திற்குள் முழு கொள்கலன் அளவையும் விடுவிக்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் 50 இறக்குமதியாளர்களிற்கு சொந்தமான 800 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் விடுவிக்கப்படாமலிருந்தமை குறிப்பிடத்தக்கது.




