மத்துகம, யததொலவத்த, ரந்திலவத்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி வீட்டில் 15 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மற்றும் ஒரு ரிவோல்வர் மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
1.55 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 50 கிராம் ஐஸ் போதைப்பொருள், மற்றும் ஒரு ரிவோல்வர் மற்றும் ஒரு மின்சார தராசை கைப்பற்றியதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள், பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1