அவுஸ்திரேலிய மக்கள்தொகையில் 80 வீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும்படி மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் அந்த நாட்டின் பிரதமர் ஸ்கொட் மொரிசன்.
அது அவுஸ்திரேலியாவுக்குத் தாம் தரும் கிறிஸ்துமஸ் பரிசாக அமையும் என்றார் அவர்.
அவுஸ்திரேலியா உயிர்களைக் காப்பாற்றுவதில் பெரும் வெற்றி கண்டிருக்கும் அதே வேளையில் மக்களுக்கு அன்றாட இயல்பு வாழ்க்கையைத் திருப்பிக் கொடுப்பதும் அவசியம் என்று மொரிசன் குறிப்பிட்டார்.
அமெரிக்கப் பயணத்தின்போது அளித்த நேர்காணலில் அவர் அவ்வாறு கூறினார்.
ஒரு நாளில் அமெரிக்காவில் நேரும் COVID-19 மரணங்கள், நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை அவுஸ்திரேலியாவில் பதிவான மரணங்களைவிட அதிகம் என்றும் அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1