வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொன்னாலை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து அவை மீட்கப்பட்டன.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்றிரவு வீடு சோதனையிடப்பட்டது. இதன்போதே வாள்கள் மீட்கப்பட்டன.
வீட்டிலிருந்த 52 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைதானவரும், வாள்களும் வட்டுக்கோட்டை பொலிசாரிடம் கையளிக்கப்பட்டு, மெலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1