அவுஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளது.
அங்கு, தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. புதிதாக அங்கு 787 பேரிடம் தொற்று உறுதிசெய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் பதிவான தினசரி எண்ணிக்கையில் இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
மேலும் 12 பேர் தொற்றுக்குப் பலியாயினர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 85 வீதத்தினருக்கும் அதிகமானோர் முதல் தடுப்பூசியைப் போட்டுள்ளதாக மாநில முதல்வர் கிலாடிஸ் பெரிஜிக்லியன் கூறினார்.
ஒக்டோபர் 11ஆம் திகதியிலிருந்து முடக்கநிலை கட்டங்கட்டமாகத் தளர்த்தப்படும். இதற்காக இரண்டு அடுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 11ஆம் திகதியில் மாநிலம் திறக்கப்படும் போது, அங்கு 70 வீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டோர் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் போன்றவற்றில் கலந்துகொள்ளலாம்.
தடுப்பூசி போடாதோர் வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவர்.
“தடுப்பூசி போடப்படாவிட்டால், மற்றவர்கள் பங்கேற்கக்கூடிய விஷயங்களில் பங்கேற்க நீங்கள் குறைந்தது நான்கு அல்லது ஐந்து வாரங்கள் காத்திருக்க வேண்டும் . நீங்கள் உங்கள் நண்பர்களுடன் உணவு சாப்பிடவும், உங்கள் வீட்டில் மற்றவர்களை வரவேற்கவும் விரும்பினால், நீங்கள் தடுப்பூசி போட வேண்டும்.” என மாநில முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தெரிவித்தார்.
தடுப்பூசி போடாதவர்களின் செயல்பாட்டுத் தடை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை பெரெஜிக்லியன் விவரிக்கவில்லை
டிசம்பரில் முழுமையாகத் தடுப்பூசி போட்டோர் எண்ணிக்கை 90 வீதமானவர்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது உள்ளரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. நீச்சல் குளங்களும் இரவுக் கேளிக்கைக் கூடங்களும் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.