பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து என்பவற்றின் விலையை அதிகரிப்பு தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் வாழ்க்கைச் செலவுக் குழுவிற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.
பால், மா, எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களிற்கு தற்போது சந்தையில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வாழ்க்கைச் செலவுக் குழு வெள்ளிக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது.
இதில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாயாலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாயாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாயாலும், சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாயால் அதிகரிக்க வாழ்க்கை செலவுக் குழு யோசனை முன்வைத்துள்ளது.
இந்த பரிந்துரைகள் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது ஆராயப்படும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காணொளி ஊடாக அமைச்சரவை கூட்டம் இன்று (27) பிற்பகல் இடம்பெறவுள்ளது.