யாழ்ப்பாணத்தில் கொலை, வாள்வெட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகபர் உள்ளிட்ட 4 ரௌடிக்குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனுரொக் என்ற ரௌடிக்குழுவின் உறுப்பினர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில மாதங்களின் முன்னர் உப்புமடம் சந்தியிலுள்ள ஹாட்வெயார் கடை உரிமையாளரின் தலையில் பொல்லால் தாக்கியதில், அவர் நினைவிழந்து, வைத்தியசாலையில் சிகிசி்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த தனுரொக் ரௌடிக்குழு உறுப்பினர் ஒருவர் தலைமறைவாகியிருந்தார். ரௌடிக்குழுக்களிற்குள் பிபிடி கனோஜி என அறியப்பட்ட அந்த நபர் மீது, பல வாள்வெட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த ரௌடிக்குழு உறுப்பினர்களை, மானிப்பாய் பொலிசார் நூதனமாக பொறிவைத்து பிடித்துள்ளனர்.
கைதான ஏனைய மூவர் மீதும் குற்றத் தொடர்புகள் உள்ளதா என்பதை பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.