தியாக தீபம் திலீபனின் 34வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
1987ஆம் ஆண்டு 5அம்ச கோரிக்கையை முன்வைத்து அகிம்சை வழியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தியாகதீபம் திலீபன், இதேநாளில் உயிர்நீத்திருந்தார்.
வருடா வருடம் உலகெங்குமுள்ள தமிழ் மக்கள் திலீபனை நினைவுகூர்வது வழக்கம்.
கோட்டாபய அரசு, தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை பலவந்தமாக அடக்க முயன்றாலும், பல பகுதிகளில் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.
திலீபனின் உயிர்பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு அஞ்சலிகள் இடம்பெற்றன.
தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது, அவரது அலுவலகத்துக்கு முன்பாக பெருமளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்தனர்.
இந்நிலையிலும், அலுவலகத்தினுள் சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.