25.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
விளையாட்டு

ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடம் பிடித்தது டெல்லி!

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 36வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கபிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது.

ரொஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் ஆடிய டெல்லி அணியின் பிரித்திவி சா 10 ரன்களிலும், ஷிகர் தவான் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு கப்டன் பன்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அணியின் ஸ்கோர் 83 ஆக உயர்ந்தபோது பன்ட் 24 ரன்களில் போல்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதிகட்டத்தில் ஹெட்மையர் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிக்க டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

முஸ்டாஃபிசூர் மற்றும் சக்காரியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பம் முதலே முட்டுக்கட்டை போட்டனர் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள்.

பேட்டிங் பவர் பிளேவான முதல் 6 ஓவரில் லிவிங்ஸ்டன்,ஜெய்ஸ்வால், மில்லர் ஆகியோரை ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து அசத்தினர் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள்.

கப்டன் சஞ்சு சாம்சன் ஒரு முனையில் நிதானமாக ஆட மறுமுனையில் வரும் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தனி ஒரு ஆளாக போராடி 39 பந்துகளில் அரைசதம் கடந்த சாம்சன் 70 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் டெல்லி அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

Leave a Comment