கனடாவின், பிரம்ப்டனில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவு 12:20 மணியளவில், பிரமாலியா வீதி மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ பகுதியில் டிராக்டர் டிரெய்லர் மற்றும் கார் என்பன மோதி விபத்திற்குள்ளானது.
சிவப்பு சமிக்ஞையை மீறி, நுழைந்த கார், டிராக்டர் டிரெய்லருடன் மோதி விபத்திற்குள்ளானது.
காரில் சென்றவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றும் இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
டிராக்டர் டிரெய்லர் டிரைவர் சம்பவ இடத்திலேயே இருந்தார். அவருக்கு எந்த காயமும் இல்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1