அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை மிரட்டி, தலையில் துப்பாக்கி வைத்த சம்பவத்தின் பின்னர் சுமார் 2 வாரங்கள் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருந்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
லொஹான் ரத்வத்தையின் நடவடிக்கை தமிழ் மக்களை கொதிப்படைய வைத்திருந்தது. அரசாங்கத்தின் சார்பில் நீதியமைச்சர் அலி சப்ரி பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணை முடிவதற்குள்ளாகவே, பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் நடக்கும் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பெரமுனவின் மட்டக்களப்பு அமைப்பாளர் சந்திரகுமார் போன்றவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் பிரமுகர்களிற்க சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.