கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளவில் அமைக்கப்பட்டுள்ள விசேட பிசிஆர் பரிசோதனை மத்திய நிலையம் காதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் இங்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பிசிஆர் பரிசோதனை ஆய்வக அறிக்கை, இங்கு 3 மணித்தியாலங்களுக்குள் வழங்கப்படும். பரிசோதனையின் முடிவுகளுக்கு அமைய ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாமல் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக வீடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.