29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

வவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களில் 89 வீதமானவர்கள் தடுப்பூசி போடாதோர்!

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களில் 89.25 வீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று பரவல் தொடர்ந்தும் இருந்து வரும் நிலையில், இறப்புக்களும் தொடர்கின்றன. இந்தநிலையை கருத்தில் கொண்டு மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக வீடுகளில் இருப்பதன் மூலமே நிலமையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று காரணமாக ஏற்பட்ட மரணங்களில் 89.25 வீதமானவர்கள் கோவிட் தொடர்பான எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள். 10.75 வீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸை மட்டும் பெற்றுக் கொண்டவர்கள். தடுப்பபூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட எவரும் இதுவரை வவுனியாவில் கோவிட் காரணமாக மரணிக்கவில்லை.

எனவே, 20 வயதிற்கு மேற்பட்டோர் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்று உங்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment