யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின், சட்டத்துறையில் பயில்வதற்காக 2019 / 2020 கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை, முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது.
சட்டத் துறைத் தலைவர் திருமதி துஷானி சயந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன், கலைப் பீடாதிபதி கலாநிதி கே.சுதாகர், மாணவர் நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிநி சி. ராஜ்உமேஷ், பதில் நூலகர் திருமதி ச. கல்பனா ஆகியோர் கலந்து கொண்டு புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினர்.
மாணவர் ஒழுக்காற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் கே. வேலாயுதமூர்த்தி, சட்டத்துறை விரிவுரையாளர்கள், சட்டத்துறை மாணவர்கள், புதுமுக மாணவர்கள் உட்பட பலர் நிகழ்நிலை ஊடாகக் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1