கனடா பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தலிபான்களை சகோதரர்கள் என குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.
தெற்கு ஒன்ராறியோவின், பீட்டர்பரோ-கவர்தா தொகுதி எம்பி மரியம் மொன்செஃப் தோல்வியடைந்துள்ளார். முன்னாள் தொலைக்காட்சி ஆளுமை மற்றும் அரசியல்வாதி மைக்கேல் ஃபெரெரியிடம் தனது தொகுதியை இழந்துள்ளார்.
அவர் லிபரல் கட்சியை சேர்ந்தவர்.
தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பத்தில், தலிபான்களை எங்கள் சகோதரர்கள் என குறிப்பிட்டிருந்தார். இதுவே அவரது தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1