26.4 C
Jaffna
December 21, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

காணாமல் போனவர்களிற்கு மரணச்சான்றிதழ்; சிறைகளிலுள்ள தமிழ் இளைஞர்களிற்கு மன்னிப்பு; புலம்பெயர் தமிழர்களிற்கு அழைப்பு: ஐ.நா செயலாளரிடம் தெரிவித்தார் கோட்டா!

காணாமல்போன நபர்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வெகுவிரைவில் முன்னெடுப்பதாகவும் , மரண சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் துரித நடவடிக்கைளை எடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸிடம் தெரிவிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை சந்தித்து கலந்துரையாடி போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம் பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, நம்பவர் மாதத்திற்கு முன்னர் 15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் செயலாளரிடம் தெரிவித்தார்.

அத்துடன் காணாமல்போன நபர்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வெகுவிரைவில் முன்னெடுப்பதாகவும் , மரண சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் துரித நடவடிக்கைளை எடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா.பொதுச் செயலாளரிடம் தெரிவிவித்துள்ளார்.

தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க தயங்க மாட்டேன் எனவும் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் மீண்டுமொருமுறை பிரிவினைவாதம் உருவாக மாட்டாது என்று உறுதியளிக்க முடியும். மத அடிப்படைவாதம் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கையைப் போன்றே ஏனைய அனைத்து நாடுகளும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இலங்கைக்குள் மிகவும் பலமான முறையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே தன்னுடைய இலக்கு. அதன்படி, போராட்டக்காரர்கள் மீது முன்னரைப் போன்று தடியடி, நீர்த்தாரைத் தாக்குதல் போன்றவற்றை நடத்த, தன்னுடைய ஆட்சியின் கீழ் ஒருபோதும் அனுமதியில்லை. போராட்டக்காரர்களுக்கென்றே, தன்னுடைய அலுவலகத்துக்கு முன்னால் தனி இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதென்றும், ஜனாதிபதி தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

Leave a Comment