போதையில் அகோரம்: தந்தையின் கண்ணைத் தோண்டிய 19 வயது மகன்!

Date:

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவமொன்று வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது என வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே இச்சம்பவம் சனிக்கிழமை (18) மாலை இடம்பெற்றுள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணாமாக 67 வயதுடைய தனது தந்தையை கடுமையான முறையில் தாக்கி 19 வயதான மகன், தந்தையின் கண்ணை தோண்டி சிதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அகோர செயலுக்கு போதைவஸ்துப் பாவனையே காரணமாக அமைந்துள்ளது என்று பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு கண் சிதைவடைந்து வெளியில் வந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்நபர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். எனத் தெரிவித்த வாழைச்சேனை பொலிஸார், அவரது மகனை சந்​தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

-குகதர்ஷன்-

spot_imgspot_img

More like this
Related

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் அச்சுவேலி வைத்தியசாலையில் தூய்மைப் பணி

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும்...

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்