நிதி அமைச்சிலிருந்து மதுவரித் திணைக்களத்திற்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் வழங்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து மதுக்கடைகளின் முன்பாகவும் பொதுமக்கள் அலைமோதி வருகிறார்கள்.
கலால் துறை உரிமம் FL04 (வைன் ஸ்டோர்ஸ்) மற்றும் FL22B (பியர் மற்றும் வைன் கடைகள்) கொண்ட மதுக்கடைகள் வணிகத்திற்காக திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுபான விற்பனையில் நிலவும் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு நிதி அமைச்சின் உயர் அதிகாரியால் தொலைபேசி மூலம் அறிவுறுத்தப்பட்டதாக மதுவரித் திணக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், நிதி அமைச்சின் இந்த உத்தரவு குறித்த முறையான எழுத்துப்பூர்வ சுற்றறிக்கையை இன்னும் பெறவில்லை என்று மதுவரித் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.
இன்று மதியம் முதல் அனைத்து முன்னணி பல்பொருள் அங்காடிகள் மற்றும் மதுபானக் கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்டன.